ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் மாணவர் அபாரம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் மாணவர் அபாரம்
ADDED : பிப் 13, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,: பெருந்துறையில் உள்ள நந்தா கல்வி நிறுவனங்களில், நந்தா இன்னோவேஷன் டே நடந்தது. இதில், 40 கல்லுாரிகளை சேர்ந்த, 350 மாணவ, மாணவியர் கலந்து
கொண்டனர்.
இதில் கோபி அருகேயுள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ-, மாணவியரும் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்களையும் பிடித்து, ரொக்கப்பரிசு பெற்றனர். இந்நிலையில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரியில் பாராட்டு விழா நடந்தது.
கல்லுாரி செயலாளரும், பவானி எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் தலைமை வகித்தார். விழாவில் கல்லுாரி
தலைவர் வெங்கடாசலம், கல்லுாரி இயக்குனர் கவியரசு, கல்லுாரி முதன்மை செயல் அதிகாரி கவுதம், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பிரகதீஸ்வரன், துணை முதல்வர் மணி, அனைத்து துறை தலைவர்கள், இருபால் ஆசிரியர், மாணவ-
மாணவியர் கலந்து கொண்டனர்.
