ADDED : டிச 01, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.ஆர்.எம்.யு., பிரசாரம்
ஈரோடு, டிச. 1-
ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ௪, ௫ல் நடக்கிறது. இதற்காக ரயில்வே தொழிலாளர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.ஆர்.எம்.யு (சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்) சார்பில் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் கோட்ட தலைவர் பாஸ்கர், கிளை தலைவர் தர்மன், செயலாளர் செந்தில் குமார், கிளை செயலாளர் சேகர் உள்ளிட்ட சங்கத்தினர், ஈரோட்டில் நேற்று, டீசல் லோகோ ஷெட், பார்சல் அலுவலகம், ஓடும் தொழிலாளர் அலுவலகம், பணிமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

