ADDED : செப் 20, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில், கிளை செயலர் கார்த்திகேயன் தலைமையில், வீர வணக்க நாள் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், ஈரோடு ரயில்வே பார்சல் புக்கிங் அலுவலகம் முன் நடந்தது.
எட்டாவது சம்பள கமிஷன் கமிட்டியை தாமதமின்றி நியமித்து, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். 50 வயது முடிந்த அல்லது 30 ஆண்டு சர்வீஸ் முடித்தவர்களை, திறமையின்மை என்ற பெயரில் கட்டாய ஓய்வில் அனுப்பும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.
போராட்டங்களின்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த, 17 தொழிலாளர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதை வலியுறுத்தினர். இதேபோன்று மாற்றொரு ஆர்ப்பாட்டம், ரயில்வே லோகோ ெஷட் பகுதியில் கிளை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.