ADDED : ஜன 24, 2026 05:50 AM
ஈரோடு; 'அம்ரித் பாரத் லோகோ' பராமரிப்பை அதிகப்படி-யான ஆட்கள் உள்ள இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். ரயில்வே துறைக்குள் தனியார் மயத்தை கைவிட வேண்டும். படிப்படியாக ஒவ்-வொரு பணியாக தனியாருக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்.
வேலைக்கு ஏற்ப புதிய ஆட்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், எலக்ட்ரிக் லோகோ ெஷட் அருகே எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். சேலம் கோட்ட செயலர் பாஸ்கர், கிளை செயலர் விஜய் கோரிக்கை குறித்து பேசினர்.
* தென்னக ரயில்வேயில் ரயில்வே ரெக்யூ-ரிட்மென்ட் போர்டு மூலம் மாற்றங்கள் வழங்கு-வதற்கு முன், நிலுவையில் உள்ள பணியிட மாற்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன், 'ஆல் இன்டியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசி-யேசன்' சார்பில் கோட்ட தலைவர் ஸ்ரீனிவா-சாபாட் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்-தனர்.

