ADDED : ஜூன் 23, 2026 01:33 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு எஸ்.ஆர்.எம்.யு. (சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்) சார்பில், ஒப்பந்த ஊழியர் முறையை ஒழித்திட வேண்டும். விடுப்பு உரி-மையை பறிக்க கூடாது. ஊழியர் பற்றாக்கு-றையால் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பெயரில் தொழிலாளர் மீது சார்ஜ் ஷீட் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு ரயில்வே, ரயில் பெட்டிகள் பராமரிப்பு பிரிவு முன், கிளை செயலாளர் தருமன் தலைமையில், நேற்று காலை வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட, 100க்கும் மேற்-பட்ட தொழிலாளர் பங்கேற்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணிக்கு திரும்-பினர்.
