/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' மாவட்டத்தில் 45 முகாம் ஏற்பாடு
/
'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' மாவட்டத்தில் 45 முகாம் ஏற்பாடு
'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' மாவட்டத்தில் 45 முகாம் ஏற்பாடு
'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' மாவட்டத்தில் 45 முகாம் ஏற்பாடு
ADDED : ஆக 03, 2025 01:22 AM
ஈரோடு :'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கிய நிலையில், வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் காணொலி காட்சியை ஒலிபரப்பி, கலெக்டர் கந்தசாமி தலைமையில் முகாம் துவக்கியது. முகாமை துவக்கி வைத்து வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
இத்திட்டத்தின்படி தமிழகத்தில், 1,256 முகாம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடக்கும். ஒரு வட்டாரத்துக்கு, 3 முகாம் என, 14 வட்டாரத்தில், 42 முகாம், மாநகரில், 3 என 45 முகாம் நடத்தப்படும். வெள்ளோட்டில், 17 சிறப்பு மருத்துவர் உட்பட, 30 டாக்டர்கள் சிகிச்சை வழங்குகின்றனர். முகாமில், 404 பேர் பதிவு செய்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் மூலம், அடுத்தடுத்து அவர்கள் எங்கும் சிகிச்சையை தொடரலாம். தொடர் சிகிச்சைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு கூறினார்.