/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 19, 2025 02:53 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட' முகாம், இன்று முதல், 22ம் தேதி வரை காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.
இன்று சித்தோடு செங்குந்தர் கைக்கோள முதலியார் திருமண மண்டபம், ஊஞ்சலுார் மாரியம்மன் கோவில் வீதி சமுதாய கூடம், பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் சாலை சக்தி திருமண மண்டபம், பவானி நகராட்சி பாலாஜி பத்மாவதி திருமண மண்டபம், அந்தியூர் முனியப்பம்பாளையம் வாரி மஹால், கொமாரபாளையம் கொங்கு மஹாலில் நடக்கிறது.
20ல் ஈரோடு, பவானி பிரதான சாலை தேவி மஹால், கோபி ல.கள்ளிப்பட்டி பிரிவு வி.எம்.கே.கலாச்சாரம் மையம், சலங்கபாளையம் செந்தாம்பாளையம் செங்குந்தர் சமுதாய கூடம், கெம்பநாயக்கன்பாளையம் தேவன் மஹால், பெருந்துறை ஸ்ரீகாமாட்சி அம்மன் செங்குந்தர் சமுதாய நலக்கூட திருமண மண்டபம், துய்யம்பூந்துறை அவல்பூந்துறை சரசு மஹாலில் நடக்கிறது.
21ல் சத்தியமங்கலம் ராமசாமி கவுண்டர் மாராயம்மாள் திருமண மண்டபம், நசியனுார் அம்மன் திருமண மண்டபம், வாணிப்புத்துார் கே.வி.மஹால், கிளாம்பாடி கருமாண்டம்பாளைம் கொங்கு மஹால், சென்னிமலை - பனியம்பள்ளி மாடுகட்டிபாளையம் ரங்கம்மாள் கோவில் மண்டபம், பவானி சின்னபுலியூர் கொங்கு செட்டியார் மஹால்.
௨௨ல் ஈரோடு மாநகராட்சி பூந்துறை சாலை ஏ.எம்.திருமண மண்டபம், புளியம்பட்டி கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிகோவில் தங்கம் மஹால், வெங்கம்பூர் திருமகள் திருமண மண்டபம், டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி மரகதம் ராமசாமி மண்டபம், அம்மாபேட்டை ஸ்ரீகொங்கு திருமகன் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம் நடக்க உள்ளது. அந்தந்த பகுதி மக்கள், முகாம்களில் கோரிக்கைகளுக்கு விண்ணப்பம் வழங்கலாம்.