தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காங்கேயம், வெள்ளகோவிலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

காங்கேயம், வெள்ளகோவிலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

காங்கேயம், வெள்ளகோவிலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா


ADDED : மார் 02, 2024 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில், ஒன்றிய செயலாளர் சிவானந்தம் தலைமையில், சிவன்மலை ஊராட்சியில் கட்சி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், செயலாளர் கருணைபிரகாஷ் தலைமையில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றப்பட்டது. கீரனுார், பரஞ்சேர்வழி, நத்தக்காடையூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 400 பேருக்கு, நோட்டு-புத்தகம், கல்வி உபகரணம் வழங்கினர்.

காங்கேயம் நகர தி.மு.க சார்பில், செயலாளர் வசந்தம் சேமலையப்பன் தலைமையில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பால், ரொட்டி வழங்கினர். அரசுப்பள்ளியில், 140 மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கி, அரசு மருத்துவமனையில், 19 பேர் ரத்த தானம் செய்தனர். வெள்ளகோவில் நகர தி.மு.க., சார்பில் செயலாளர் சபரி முருகானந்தன் தலைமையில், கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம். சர்வாலயம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்துக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

* திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், முதல்வர் ஸ்டாலின், 71வது பிறந்த நாளை ஒட்டி, பழைய நகராட்சி அலுவலகம் முன், 71 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திரளான தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us