/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு கலை கல்லுாரியில் நட்சத்திர கல்லுாரி திட்டம்
/
கொங்கு கலை கல்லுாரியில் நட்சத்திர கல்லுாரி திட்டம்
கொங்கு கலை கல்லுாரியில் நட்சத்திர கல்லுாரி திட்டம்
கொங்கு கலை கல்லுாரியில் நட்சத்திர கல்லுாரி திட்டம்
ADDED : செப் 28, 2024 01:30 AM
கொங்கு கலை கல்லுாரியில்
நட்சத்திர கல்லுாரி திட்டம்
ஈரோடு, செப். ௨௮-
ஈரோடு அருகேயுள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான நட்சத்திர கல்லுாரி திட்டம் பற்றி அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி நுண்ணுயிரியல் துறை இணை பேராசிரியர் ராஜேந்திரன், இத்திட்டம் குறித்து விளக்கி பேசினார்.
விழாவுக்கு கல்லுாரி தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வித்யா வரவேற்றார். நிறைவில் கணினி அறிவியல் துறை தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்வில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.