நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தேசிய இளைஞர் தினத்தை ஒட்டி, பா.ஜ., சார்பில் இலவச தையல் பயிற்சி வகுப்பு, தாராபுரத்தை அடுத்த மூலனுாரில் நேற்று நடந்தது. பாஜ., வடக்கு மண்டல் மகளிரணி தலைவி துர்-காதேவி ரமேஷ் ஏற்பாட்டில் முகாம் நடந்தது. நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில பொறுப்பாளர் புவனேஷ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.