ADDED : நவ 25, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், பினாங்குகாரர் தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 40; தனக்கு சொந்தமான டாடா ஏஸ் வாகனத்தை கடந்த, 23ம் தேதி மாலை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
மறுநாள் அதிகாலை வாகனத்தை எடுத்து செல்ல வீட்டுக்கு வெளியே வந்தபோது காணவில்லை. இதுகுறித்து வீரப்பன்சத்-திரம் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், திருச்சி, உறையூர், நாடார் தெருவை சேர்ந்த ஆகாஷ், 19, என்ப-வரை கைது செய்து, வாகனத்தை மீட்டனர்.