ADDED : ஏப் 26, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டி-ஜரத்தல் செல்லும் புதுக்காலனி பகுதியில், அந்தியூர் மண்டல தாசில்தார் பிரகாஷ், சென்னம்பட்டி வி.ஏ.ஓ., தங்கவேல் ஆகியோர், நேற்று மாலை, வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ஜரத்தல் நோக்கி ஒரு டிப்பர் லாரியில் சோதனை செய்தனர். ஒரு யூனிட் சாதாரண கல் இருந்தது தெரிந்தது. அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, டிரைவர் தப்பி ஓடினார். விசாரணையில் அம்மாபேட்டை அருகே இலிப்பிலி, தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்தது. டிப்பர் லாரியை கைப்பற்றிய அலுவலர்கள், வெள்ளித்திருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

