/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்
ADDED : ஆக 02, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், :காங்யேத்தில் இருந்து சிவன்மலை வழியாக இயக்கப்பட்ட டவுன் பஸ், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பாதிப்புக்கு ஆளாகன மக்கள், அமைச்சர் சாமிநாதனிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் காங்கேயம் முதல் திருப்பூர் வரை சிவன்மலை வழியாக செல்லும் பஸ் சேவை மீண்டும் நேற்று தொடங்கப்பட்டது.
அதிகாலை காங்கேயத்தில் இருந்து, 5:30 மணிக்கு கிளம்பும் பஸ் திருப்பூர் சென்று மீண்டும் காங்கேயம் வரும். அங்கிருந்து காலை, 8:10 மணிக்கு சிவன்மலை வழியாக செல்கிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோரின் தவிப்பு முடிவுக்கு வந்தது. நேற்று பஸ் இயக்கப்பட்டதை, அப்பகுதியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

