ADDED : மே 11, 2026 03:26 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:மாநகர
பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து,
உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகரில் பெருந்துறை சாலை, பவானி சாலை,
சத்தி சாலை, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, காந்திஜி சாலை,
கருங்கல்பாளையம் சாலை உள்ளிட்ட சாலைகள் பிரதானமாக உள்ளன. இந்த
சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து அபாயம்
ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள்
செல்லும்போது, தெருநாய்கள் ஒன்றோடொன்று சண்டை போடுகின்றன. அங்கும்
இங்குமாக ஓடி வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறது.
வாகன ஓட்டிகளின் நலன் கருதி, தெருநாய்களை பிடிக்க கோரிக்கை
விடுத்துள்ளனர்.
