ADDED : மார் 23, 2026 02:40 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை: வெள்ளோட்டை அடுத்த மயிலாடி, வேலம்பாளையத்தை சேர்ந்த விவசாயி மூர்த்தி. ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று காலை தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.
அப்போது வந்த மூன்று தெருநாய்கள், கட்டி வைத்திருந்த ஒரு வெள்-ளாட்டை சுற்றி வளைத்து கடிக்க தொடங்கின. இதில் உடல் சிதைந்து ஆடு பலியானது. சத்தம் கேட்டு சென்ற அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டியடித்தனர்.
