தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறல்

சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறல்

சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறல்


ADDED : ஆக 05, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் அருகே ஈசப்பாறை வதிகால் தோட்டத்தை சேர்ந்தவர் பாக்கியம்மாள், 65; கூலி தொழிலாளி. வனத்தை ஒட்டிய பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அப்பகுதியில் நடமாடியது. அவரது வளர்ப்பு நாய் குரைக்கவே சத்தம் கேட்டு பாக்கியம்மாள், அவரது குடும்பத்தினர் வெளியே சென்றனர். குரைத்த நாயை, சிறுத்தை துரத்தி கவ்வி சென்றை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் நேற்று சென்று ஆய்வில் ஈடுபட்டனர். ஏற்கனவே சிறுத்தையை பிடிக்க முருகன் கோவில் அருகில் கூண்டு வைத்திருந்தனர். அதை வதிகால் தோட்டம்

பகுதிக்கு கொண்டு சென்று வைத்தனர். தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். அதேசமயம் அப்பகுதியிலேயே நடமாடும் சிறுத்தை, ஆடுகள் மற்றும் நாய்களை கவ்விச் செல்வது, விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் பீதியை அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us