/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரத்தில் பைக் மோதிகல்லுாரி மாணவன் பலி
/
மரத்தில் பைக் மோதிகல்லுாரி மாணவன் பலி
ADDED : ஏப் 26, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை:பவானியை அடுத்த சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த தங்கராசு மகன் சிவசங்கர், 20; துடுப்பதியில் தனியார் பொறியியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். தன்னுடன் படிக்கும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த கார்த்திக் செல்வன், 19, என்பவருடன், சக மாணவர் ஒருவரின் பைக்கை வாங்கிக்கொண்டு, நேற்று முன்தினம் பிற்பகல் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
பாலக்கரை அருகில் ரோட்டோர தென்னை மரத்தில் பைக் மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிவசங்கர் இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

