/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வளர்ப்பு நாயால் வந்த வினை ரேபிஸ் தாக்கி மாணவன் பலி
/
வளர்ப்பு நாயால் வந்த வினை ரேபிஸ் தாக்கி மாணவன் பலி
வளர்ப்பு நாயால் வந்த வினை ரேபிஸ் தாக்கி மாணவன் பலி
வளர்ப்பு நாயால் வந்த வினை ரேபிஸ் தாக்கி மாணவன் பலி
ADDED : நவ 15, 2025 01:30 AM

சென்னிமலை: வெள்ளோடு அருகே வளர்ப்பு நாய் கடித்ததில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, கல்லுாரி மாணவன் பலியானார்.
ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டை அடுத்த கனகபுரம், வேப்பங்காட்டு தோட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி தம்பதி நாகராஜ் - சரோஜா. இவர்களின் இளைய மகன் ரமேஷ், 22; ஈரோடு, ரங்கம்பாளையத்தில் தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இவர்கள் வளர்த்து வரும் வீட்டு நாயை, இரு மாதத்துக்கு முன் தெருநாய்கள் கடித்துள்ளன. இந்நிலையில், 20 நாட்களுக்கு முன், ரமேஷை வளர்ப்பு நாய் கடித்துள்ளது. உடனடியாக சிகிச்சை மேற்கொண்டாலும், ரமேஷின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமேஷ் இறந்தார். வளர்ப்பு நாய் கடித்து மாணவன் பலியானது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

