மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி பவானியில் உறவினர்கள் மறியல்
மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி பவானியில் உறவினர்கள் மறியல்
ADDED : ஆக 12, 2026 06:45 AM
பவானி,:ஈரோடு
மாவட்டம் பவானி அருகே குப்பிச்சிபாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி
செயல்பட்டு வருகிறது. ஏமம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஈஸ்வரன்
மகன் யோகேஸ்வரன், 11; நேற்று மதிய உணவு இடைவெளியின்போது சாப்பிட்டு
விட்டு, டிபன் பாக்ஸை கழுவ சென்றார்.
பள்ளியில் தண்ணீர் வராததால்,
அருகிலுள்ள அரசு துவக்கப்பள்ளிக்கு சென்றான். பள்ளியில் கீழே கிடந்த
மின் ஒயரை மிதித்தபோது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டான்.
அருகில்
இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மயிலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் மாணவன்
ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. பெருந்துறை அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இதனிடையே
தகவலறிந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை
முற்றுகையிட்டனர். இதனால் மற்ற சிறுவர்களின் பெற்றோர், தங்கள்
குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். பவானி-மேட்டூர் தேசிய
நெடுஞ்சாலையில், 3:00 மணியளவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில்
அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பவானி டி.எஸ்.பி., சீதாலட்சுமி
தலைமையிலான போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடன்பாடு ஏற்படாததால் இரவு, 7:30 மணியளவில் போலீசார் அவர்களை
வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் நெடுஞ்சாலையில்
நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
