100 நாள் திட்ட பணியில் மூதாட்டி சாவு ஆதரவை இழந்த மாணவன்-மாணவி
100 நாள் திட்ட பணியில் மூதாட்டி சாவு ஆதரவை இழந்த மாணவன்-மாணவி
ADDED : மார் 11, 2026 07:02 AM
அந்தியூ:அந்தியூர்
அருகே எண்ணமங்கலம் ஊராட்சி, செல்லம்பாளை-யத்தை சேர்ந்தவர்
பழனியம்மாள், 70; நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளி. எண்ணமங்கலம்
அருகே ஆலயங்கரட்டில், நேற்று வேலைக்கு சென்றார்.
காலை, 11:00
மணிக்கு வேலை செய்து கொண்டிருந்த நிலையில், நெஞ்சு வலிப்பதாக கூறி
மயங்கி விழுந்தார். இதுகு-றித்து, 108 அவசர கால ஆம்புலன்ஸுக்கு தகவல்
தரப்பட்டது. மருத்துவ ஊழியருடன் வாகனம் விரைந்தது.
ஊழியர் பரிசோதனையில்,பழனியம்மாள்
இறந்து விட்டது தெரிந்தது. வெள்ளித்திருப்பூர் போலீசார் சடலத்தை
மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழனியம்மாளின் மகன், மருமகள், 10 ஆண்டு களுக்கு முன் இறந்து
விட்டனர்.இதனால் பேரன் தவராஜ், 18; பேத்தி காளீஸ்வரி, 16; ஆகி-யோரை
பராமரித்து வந்தார். பேரன் கோவையில் கல்லுாரி-யிலும், பேத்தி
அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
ஆதரவாக இருந்த பாட்டி இறந்து விட்-டதால், இருவரும் ஆதரவின்றி
தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்-டுள்ளனர்.
