ADDED : செப் 09, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாணிக்கம்பாளையம் ராம் நகரை சேர்ந்த சரவணன் மகள் ஜோதிஸ்ரீ, 17; தனியார் கல்லுாரி மாணவி. வீட்டில் அதிக நேரம் போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்த நிலையில், கடந்த, 6ம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அவரது தாய் பேபி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடிவருகின்றனர்.
* அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 61; தச்சு தொழிலாளி. இவரது மனைவி, விஜயபாமா, 42; வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை என்று, அம்மாபேட்டை போலீசில் மோகனசுந்தரம் புகாரளித்துள்ளார்.
* கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 40, கூலி தொழிலாளி; கடந்த, 2ம் தேதி முதல் காணவில்லை. அவரின் மனைவி நந்தினி புகாரின்படி, கோபி போலீசார் தேடுகின்றனர்.