நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 16 வயது மகள், அரசுப் பள்ளியில் பிளஸ் -1 படித்து வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்ட நிலையில், நேற்று மதியம் சாணிப்பவுடரை உட்கொண்டு மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.