ADDED : ஆக 25, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, திண்டல், வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இரு-பாலர்) கல்லுாரியில், 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் சங்கக்-குழு பதவியேற்பு விழா
நடந்தது.
வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலர் சந்திரசேகர் தலைமை உரையாற்றினார். கல்லுாரி நிர்வாகி பாலசுப்பிரமணியன் நோக்க உரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் நல்லசாமி, புல முதன்-மையர் லோகஷ்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இயக்குனர் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினர்.தேர்வு செய்யப்பட்ட மாணவ தலைவர்கள், தமக்கு கிடைத்த பொறுப்புகளை உண்மையோடு நிறைவேற்றுவோம் என்ற உறுதி-மொழி எடுத்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஓய்வு பெற்ற கடற்படை விமானி மற்றும் குழுத்தேர்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் விமல்ராஜ், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.