தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவி, இளம்பெண் மாயம்

மாணவி, இளம்பெண் மாயம்

மாணவி, இளம்பெண் மாயம்


ADDED : நவ 30, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, மொடக்குறிச்சி ஆலன்காட்டு வலசு குயவன் தோட்டத்தை சேர்ந்தவர் சின்னசாமி. தனியார் கல்லுாரி டிரைவர். இவரின் மகள் கோபிகா, 19; திருச்செங்கோட்டில் ஒரு கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படிக்கிறார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நிலையில், 26ம் தேதி மதியம் வீட்டில் இருந்து சென்றவர் மாயமாகி விட்டார். தந்தை சின்னசாமி புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

* ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி நகர் அய்யன்காட்டை சேர்ந்த சந்துரு மனைவி பவித்ரா, 26; கடந்த அக்.,24ல் திருமணம் நடந்தது. தனக்கு இங்கு வாழ விருப்பமில்லை. எங்காவது சென்று விடுவேன் என்று கணவனிடம் அடிக்கடி கூறியுள்ளார். உறவினர்கள் அறிவுரையையும் ஏற்காமல் கணவருடன் சரிவர குடும்பம் நடத்தாமல் இருந்தார். கடந்த, 27ம் தேதி மாயமாகி விட்டார். சந்துரு புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us