ADDED : நவ 29, 2024 01:10 AM
அ நிறம் | அளவு
படிக்க சென்ற இடத்தில்
மாணவன் பைக் திருட்டு
பெருந்துறை, நவ. 29-
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த, காடையூரை சேர்ந்தவர் கலைசெல்வன், 20; பெருந்துறை தனியார் பொறியியல் கல்லுாரி மாணவன். தேர்வுக்கு படிப்பதற்காக, பெருந்துறை அருகே சென்னிவலசில் உள்ள நண்பன் அறைக்கு, நேற்று முன்தினம் இரவு வந்தார். அறைக்கு வெளியில் யமாகா ஆர்.எக்ஸ் பைக்கை நிறுத்தியிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின்படி பெருந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.
