/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல் குவாரி குட்டையில் சடலமாக மாணவி மீட்பு
/
கல் குவாரி குட்டையில் சடலமாக மாணவி மீட்பு
ADDED : ஆக 15, 2025 02:15 AM
அந்தியூர், பர்கூர்மலை தாமரைக்கரையை அடுத்த தம்புரெட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் சன்னப்பன், 42; கொங்காடை அருகே கோயில்நத்தத்தில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யா, 16; அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி. வலிப்பு நோய் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி, பள்ளிக்கு ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் கோயில்நத்தத்துக்கு நேற்று முன்தினம் சென்றார்.
நேற்று காலை காலைக்கடன் கழிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் தேடியபோது அப்பகுதியில் கல்குவாரி குட்டை அருகே, ரம்யா அணிந்திருந்த ஸ்வெட்டர் கிடந்தது. சந்தேகத்தின் பேரில் குட்டையில் குதித்து தேடியபோது ரம்யா சடலமாக மீட்கப்பட்டார். பர்கூர் போலீசார் உடலை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வலிப்பு நோயால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.