/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்த மாணவர்கள்
/
பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்த மாணவர்கள்
ADDED : அக் 03, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், பர்கூர் மலைப்பகுதியில் அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தினங்களில், பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை-கர்நாடக எல்லையான கர்கேகண்டி வரை வனப்பகுதியை ஒட்டிய சாலையோரம், பிளாஸ்டிக் பொருள், மது பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரு நாட்களில், 500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, தட்டகரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மலைப்பாதையில் வாகனங்களில் சென்றவர்களிடம், பிளாஸ்டிக் பொருள், மது பாட்டில்களை சாலையோரம் வீசாதீர்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.