/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
/
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
ADDED : மே 05, 2025 02:29 AM
பவானி: அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில், அரசு நிதி உதவி பெறும் புனித இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில், 1995-96ல் படிப்பை படித்து முடித்து வெளியேறிய மாணவ, மாணவிகள், 30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் நேற்று சந்தித்து கொண்-டனர்.
இந்நிகழ்வில், 40 முன்னாள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னாள் ஆசிரியர்களுக்கு மலர் துாவி பள்ளி வளாகத்துக்கு வர-வேற்றனர். பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். பள்ளி நாட்களில் நடந்த சுவாரசிய சம்பவங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர்கள் பிரம்பால் அடித்து திருத்தியதை நினைவுபடுத்தும் விதமாக, மீண்டும் ஆசிரியர் கையில் பிரம்பை கொடுத்து கையை நீட்டி, வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நின்று, அன்பு பொங்க அடி வாங்கி மகிழ்ந்தனர்.
பள்ளி தாளாளரும், தலைமையாசிரியருமான சகாய டேனிஸ் தலைமையில், உதவி தலைமையாசிரியர் ஜெயபால்ராஜ் உட்பட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். நிறைவில் அனை-வரும் குழு புகைப்படம் எடுத்து
கொண்டனர்.

