/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்
/
உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்
ADDED : ஆக 15, 2024 07:00 AM
ஈரோடு: ஈரோடு எஸ்.கே.சி.
சாலையில் உள்ள, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஷியாம் கலை மற்றும் கைவினை கலைக்கூடம், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் சே வெ வேர்ல்ட் ரெக்கார்ட் போரம் இணைந்து நடத்தும், உலக சாதனை நிகழ்வில் 84 பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களும், ஆசிரியர்களும் மூவர்ண கொடியை பறக்கவிட்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தேசிய கீதத்தை தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் எழுதியும், சுதந்திர தினம், உலக அமைதி, நீர் சேகரிப்பு, உலக சமாதானம், மாசுபாட்டை தவிர்த்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் ஓவியம் மற்றும் ரங்கோலி போட்டிகளில் கலந்து கொண்டனர். தலைமையாசிரியை சுமதி தலைமை வகித்தார். கணினி ஆசிரியை கவிதா ஒருங்கிணைத்தார்.