ADDED : மார் 11, 2026 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
அருகேயுள்ள வரதம்பாளையத்தை சேர்ந்தவர் தேவதர்ஷினி, 16; சத்தி
அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி. பெற்றோர், 10
ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், பாட்டி பூவாத்தாள் பராமரிப்பில்
இருந்தார்.
நேற்று முன்தினம் பாட்டி வேலைக்கு சென்ற நிலையில்,
தேவதர்ஷினி வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் துாக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி சத்தி போலீசார்
விசாரிக்கின்றனர்.

