/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மடவிளாகத்தில் ரூ.20 கோடியில் துணை மின் நிலையம்
/
மடவிளாகத்தில் ரூ.20 கோடியில் துணை மின் நிலையம்
ADDED : டிச 17, 2025 07:25 AM
காங்கேயம்: பல்லடம் மின் பகிர்மான கழகத்தில், காங்கேயம் கோட்டத்தில் காங்கேயம் நகரம், தாராபுரம் சாலையில் வட்டமலை வரை, கோவை சாலையில் காடையூர் வரை, திருப்பூர் ரோடு, சிவன்-மலை, படியூர், கரூர் சாலையில் ஓலப்பாளையம் வரை மற்றும் பழைய கோட்டை சாலை, நத்தக்காடையூர், பாப்பினி, மருதுறை, பரஞ்சேர்வழி ஆகிய பகுதிகளில், 1.60 லட்சம் மின் பயனீட்டா-ளர்களுக்கு, 175 மெகாவாட் மின்சாரம் தினமும் வழங்கப்படுகிறது.
இதற்காக தாராபுரம் சாலை துணை மின் நிலையம், பழைய கோட்டை துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நி-லையில் கூடுதலாக மின்வாரிய கழகத்தின் சார்பில், காங்கேயம் அடுத்த மடவிளாகம் பகுதியில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்-டுள்ளது. இங்கு, 110/11 கிலோவாட் உற்பத்தி செய்யப்படும். இந்த மின் நிலையத்தை சுற்றியுள்ள, 7 கி.மீ., பகுதிகள் மற்றும் சில ஊர்களுக்கு, தொய்வின்றி மின்சாரம் கிடைக்கும் என்று, மின்-வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

