sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மணிக்கூண்டு ரோட்டில் திடீர் குழி வாகன ஓட்டிகள், மக்கள் அதிர்ச்சி

/

மணிக்கூண்டு ரோட்டில் திடீர் குழி வாகன ஓட்டிகள், மக்கள் அதிர்ச்சி

மணிக்கூண்டு ரோட்டில் திடீர் குழி வாகன ஓட்டிகள், மக்கள் அதிர்ச்சி

மணிக்கூண்டு ரோட்டில் திடீர் குழி வாகன ஓட்டிகள், மக்கள் அதிர்ச்சி


ADDED : அக் 06, 2025 04:32 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு மணிக்கூண்டு பகுதியில் ஏராளமான மொத்தம், சில்லறை ஜவுளி விற்பனை கடை செயல்-பட்டு வருகிறது. மாநகரில் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. நேற்று மதியம், 2:30 மணியளில் மணிக்கூண்டு அமைந்திருக்கும் இடத்தில் சாலையில், திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சிக்கு ஆளா-கினர். வாகன ஓட்டிகளும் சுதாரித்து வாகனங்களை நிறுத்தி-யதால், பள்ளத்தில் சிக்காமல் தப்பித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பள்ளத்தை சுற்றிலும் பேரிகார்டு வைத்து தடுத்-தனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

அவர்களின் தகவலை தொடர்ந்து மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். ஜே.சி.பி., வாகனம் மூலம் பள்ளத்தை சரிசெய்து, ரெடிமிக்ஸ் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி கடைக்காரர் ஒருவர் கூறியதாவது: பள்ளம் ஏற்பட்ட இடத்தில் ரோட்டுக்கு அடியில் பாதாள சாக்-கடை செல்கிறது. அவ்வப்போது கழிவுநீர் கசிந்து வந்தது. இத-னால்மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது. பகல் நேரம் என்பதால் அசம்பாவிதம் நடக்கவில்லை. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us