ADDED : பிப் 08, 2025 06:35 AM
பவானி: அம்மாபேட்டை அருகேயுள்ள சென்னம்பட்டி ஜர்த்தல், திம்மநா-யக்கன் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 58; விவசாயி. கடன் பிரச்னை இருந்ததால் மனவேதனை அடைந்தார். இந்நிலையில் கந்தசாமி நேற்று பூச்சி மருந்தை குடித்து விட்டார். வாந்தி எடுத்து மயங்கியவரை, குடும்பத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து
விட்டது தெரிய வந்தது. * அம்மாபேட்டையை அடுத்த கொமராயனுர், மசக்கவுண்டனுார் பெரியார் நகரை சேர்ந்த தொழிலாளி
பழனிச்சாமி, 65; கடந்த, 6ம் தேதி இரவு குடிபோதையில் இருந்தவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து
விட்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட நிலையில் நேற்று இறந்தார். இரு
தற்கொலை குறித்தும் வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* அரச்சலுார் அருகே வெள்ளிகிரிபுதுாரை சேர்ந்தவர் பிரதீப், 31; திருமணமாகி விட்டது,
குழந்தைகள் இல்லை. பிரதீப்புக்கு குடிப்-பழக்கத்துடன், ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கம்
இருந்-தது. இதை மனைவி கண்டித்து வந்தார். கடந்த, 6ம் தேதி இரவு குடித்துவிட்டு வந்தவர், 'தனது
தந்தைக்கு பைபாஸ் சர்ஜரி நடந்-துள்ளது' என்று அழுது கொண்டே படுக்கை அறைக்கு சென்றார். இரவு
உணவு சாப்பிட கவுசல்யா அழைக்க கதவை திறந்தபோது, உட்புறம் தாழிட்டு இருந்தார். பக்கத்து வீட்டார்
உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மின்விசிறியில் சடலமாக தொங்கினார்.
புகாரின்படி அரச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.