/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்ஆர்வத்துடன் சிறுவர், சிறுமியர் பங்கேற்பு

ADDED : ஏப் 26, 2025 01:14 AM
ஈரோடு:ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட விளையாட்டரங்கில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
இதில் ஆர்வத்துடன் சிறுவர், சிறுமியர் என, 110 பேர் வரை பங்கேற்றனர்.
இதுபற்றி மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார் கூறியதாவது: இங்கு தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர் என, 110 பேர் முதல் நாளில் பங்கேற்றனர். தினமும் காலை, 6:00 முதல், 8:00 மணி; மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்போருக்கு சிற்றுண்டி வழங்கப்படும். குறிப்பிட்ட விளையாட்டில், அவரவர் விருப்பத்துக்கான பயிற்சி துவங்கியது. மே, 21ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும்.
முகாம் முடிவில் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர், 74017 03490 என்ற எண்ணில் பதிவு செய்து பங்கேற்கலாம். இவ்வாறு கூறினார்.