ADDED : ஜூன் 04, 2026 04:50 AM

ஈரோடு:ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைக்கால நீச்சல் பயிற்சி கடந்த ஏப்.,1ம் முதல் ஜூன் 14 வரை ஐந்து பிரிவுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுவரை நான்கு கட்ட பயிற்சி முடிந்துள்ளது. முதல்கட்ட பயிற்சியில், 40 பேர், இரண்டாம் கட்ட பயிற்சியில், 150 பேர், மூன்றாவது கட்ட பயிற்சியில், 186 பேர், நான்காம் கட்ட பயிற்சியில், 60 பேர் என மொத்தம், 436 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
இறுதியாக ஐந்தாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், 8 பள்ளி மாணவர்கள், 2 கல்லுாரி மாணவர்கள் என மொத்தம், 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சியாளர் மூலம், அடிப்படை நீச்சல் கற்று கொடுக்கப்படுகிறது. பயிற்சியின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு, நான்கு உயிர் காப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இப்பயிற்சி ஜூன், 14ம் தேதியுடன் நிறைவடைகிறது.
