ADDED : நவ 19, 2026 06:21 AM
ஈரோடு:ஈரோடு,
46 புதுார் கரட்டாங்காடு 4வது வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி
நவோமியா, 35. மோகன்ராஜ், 47, எலக்ட்ரீஷியன். குடிபோதைக்கு
அடிமையானவர்.
அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், நவோமியா 6
ஆண்டுக்கு முன் மோகன்ராஜூவை பிரிந்து, குழந்தைகளுடன்
கரட்டான்காட்டில் உள்ள மரிய நிவாஸ் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி,
சமையல் வேலை செய்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை, 8:30 மணியளவில்
ஆதரவற்றோர் காப்பகத்தில் நவோமியா சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மோகன்ராஜ், நவோமியா முதுகின் வலது புறம்
கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
மொடக்குறிச்சி போலீசார் சென்று, நவோமியாவை மீட்டு ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு 3 தையல்
போடப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி போலீசார், மோகன்ராஜூவை
விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
மனைவி நடத்தையில் சந்தேகமடைந்து, மோகன்ராஜ் கத்திக்குத்தில் ஈடுபட்டதாக விசாரணைக்கு பின் போலீசார் தெரிவித்தனர்.
