ADDED : ஆக 12, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சத்தியமங்கலத்தை
சேர்ந்த கணவனை இழந்த, 38 வயது பெண், 16 மற்றும் 12 வயது மகள்களுடன்
வசிக்கிறார். புளியம்பட்டி நல்லுார் செட்டியார் வீதியை சேர்ந்த
தொழிலாளி பிரபுசாமி, 45; மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
அப்பெண்ணும்
பிரபுசாமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு
செல்லும் போது அந்தப்பெண் இல்லாத சமயங்களில், அவரின் மகள்களிடம்
பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மகள்கள் இருவரும்
தாயிடம் தெரிவிக்க, சத்தி அனைத்து மகளிர் போலீசில், அவர் புகார்
செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோவில் வழக்குப்பதிந்து
பிரபுசாமியை கைது செய்தனர்.
