மாணவர்களை வனப்பகுதிக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு
மாணவர்களை வனப்பகுதிக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு
ADDED : அக் 08, 2026 04:37 AM

அ நிறம் | அளவு
பு.புளியம்பட்டி:உலக வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்., 2 முதல் 8ம் தேதி வரை வனப்பகுதி, சரணாலயங்கள், வனஉயிரின பூங்காக்களில் விழிப்புணர்வுடன் கூடிய நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பவானிசாகர் வனச்சரகம் சார்பில், ரேஞ்சர் சங்கர் தலைமையில், கொத்தமங்கலம் அரசுப்பள்ளி மாணவர்களை வேட்டை தடுப்பு முகாமிற்கு அழைத்து சென்று வனம் மற்றும் வன உயிரினங்களின் வாழ்க்கை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
மேலும், வேட்டை தடுப்பு முகாமின் பணிகள் குறித்தும், வனப்பகுதியில் விலங்குகள் தாகம் தீர்க்க நீர் அருந்தும் தொட்டிகளை நேரில் காண்பித்தும், மரம் வளர்ப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பவானி சாகர் வனச்சரக பணியாளர்கள், வேட்டை தடுப்பு
காவலர்கள் கலந்து கொண்டனர்.
