டாஸ்மாக் ஊழியர் பேச்சுவார்த்தைதோல்வி; இன்றும் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் ஊழியர் பேச்சுவார்த்தைதோல்வி; இன்றும் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 26, 2026 04:40 AM
அ நிறம் | அளவு
பவானி:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 144 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், 200க்கும் மேற்பட்டோர், பவானி அருகே சூரியம்பாளையத்தில் உள்ள, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
பாட்டிலுக்கு, 10 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, போராட்டக்குழு தலைவர் கோபால் தலைமையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டத்தால், ஈரோடு மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
இதனிடையே போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் இரவு, 7:40 மணியளவில் பேச்சுவார்த்தை நடந்தது. இது தோல்வியில் முடிந்தால் நாளை (இன்று) காலை, மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
