ஊதிய உயர்வுக்கு வரவேற்பு டாஸ்மாக் ஊழியர்கள் கருத்து
ஊதிய உயர்வுக்கு வரவேற்பு டாஸ்மாக் ஊழியர்கள் கருத்து
ADDED : செப் 01, 2026 05:22 AM
ஈரோடு; சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்-வைத்துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு மாதம், 33,023 ரூபாய், விற்பனையாளர்களுக்கு, 30,284 ரூபாய், டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு, 28,680 ரூபாய் என ஊதியத்தை உயர்த்தி நேற்று அறி-வித்தார். மேலும், பண்டிகை கால முன்பணம், 20,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்-துள்ளார்.
இதுபற்றி ஈரோடு மாவட்ட டாஸ்மாக் தொ.மு.க., கவுன்சிலர் செயலர் மற்றும் டாஸ்மாக் ஊழியர் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் கோபால் கூறியதாவது: ஊதிய உயர்வை வரவேற்கிறோம். அதேநேரம் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பல டாஸ்மாக் கடைகள் இடம், வாடகை பிரச்-னையில் திணறுகிறது. அரசு வழங்கும் சிறு தொகை வாடகை தவிர, மற்ற தொகையை ஊழி-யர்கள் கையில் இருந்து செலுத்தும் நிலை தொடர்வதால், அரசே முழுமையாக வழங்க வேண்டும். கடைக்கான மின் கட்டண தொகையில் ஒரு பகுதியை அரசு வழங்குகிறது. மீதி தொகையை ஊழியர் செலுத்தும் நிலையில், முழு தொகையையும் அரசே செலுத்தும் என ஏற்-கனவே தெரிவித்ததை அமலாக்க வேண்டும். அதைவிட முக்கியமாக காலி மது பாட்டில்களை தனி ஏஜென்சி மூலம் திரும்ப பெறும் முறையை கட்டாயமாக அமலாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
