ADDED : மே 16, 2026 05:28 AM
அந்தியூர்: அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதுாரில் மக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம்புதுாரில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, த.வெ.க., பிரம்மதேசம் கிளை செயலாளர் கார்த்திக் தலைமையில், டாஸ்மாக் கடை முன் நேற்று மதியம் 12:30 மணிக்கு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாசில்தார் இளஞ்செழியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரகுநாதனும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
அதே நேரம் மறியலால் காலை ௧௨:௩௦ மணி முதல் மாலை ௫:௪௫ மணி வரை போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. முகாசிப்புதுாரில் மறியல்
அம்மாபேட்டை, பூனாச்சி அருகே முகாசிப்புதுார் பஸ் நிறுத்தம் அருகில், டாஸ்மாக் மதுக்கடை பல ஆண்டாக செயல்பட்டு வருகிறது. கடையை மூட வலியுறுத்தி, இப்பகுதி பெண்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை.
இந்நிலையில் முகாசிப்புதுாரில், நுாற்றுக்கணக்கான பெண்கள், நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் வருவாய் துறையினர் மற்றும் அம்மாபேட்டை போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடை விரைவில் அகற்றப்படும் என கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டாவது நாளாக நேற்றும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, பெண்கள் மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
