தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பிப்.,3ல் முற்றுகை போராட்டம் டாஸ்மாக் பணியாளர் முடிவு

பிப்.,3ல் முற்றுகை போராட்டம் டாஸ்மாக் பணியாளர் முடிவு

பிப்.,3ல் முற்றுகை போராட்டம் டாஸ்மாக் பணியாளர் முடிவு


ADDED : ஜன 10, 2026 08:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 08:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏ.ஐ,டி.யூ,சி.,) சார்பில், ஈரோடு மாவட்டம் கோபியில், மாநில செயற்குழு கூட்டம், தலைவர் பெரியசாமி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், 22 ஆண்டுகளாக, டாஸ்மாக் நிர்வாகம் நடத்தி வரும் வாணிப கழகம் மூலம் நடக்கும் சில்லரை மதுபான வியா-பாரத்தில், பணியின் நிலைமை குறித்து செயற்குழுவில் விவாதிக்-கப்பட்டது.

பணியாளர்கள் இதுவரை நிரந்தரம் செய்யப்படாமல், காலமுறை மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாமல், தொகுப்பூதியத்தில் வைத்-திருப்பது சட்ட முறைகளுக்கு எதிரானது. எனவே பணி நிரந்தரம், காலமுறை மற்றும் ஓய்வூதியம் என்ற மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கி, கடந்தாண்டு பிப்.,11 முதல் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

துறை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோரிக்கைகள் குறித்து இறுதி முடிவு இதுவரை எட்டப்

படவில்லை.

எனவே எங்களின் கோரிக்

கைகளை வலியுறுத்தி, பிப்.,3ல், சென்னை, மேலாண்மை அலுவ-லகத்தில் இருந்து தலைமை செயலகம் வரை ஊர்வலமாக சென்று கோரிக்கைகளை நிறைவேறும் வரை, குடும்பத்துடன் தலைமை செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us