தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாலையோரம் நின்ற காரை உருக்குலைத்த டாரஸ் லாரி

சாலையோரம் நின்ற காரை உருக்குலைத்த டாரஸ் லாரி

சாலையோரம் நின்ற காரை உருக்குலைத்த டாரஸ் லாரி


ADDED : ஜன 24, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர்; திருப்பூர் மாவட்டம் குன்னத்துாரை சேர்ந்தவர் பூபதி. உறவினர்கள் நான்கு பேருடன், வெள்ளித்-திருப்பூரை அடுத்த குருவரெட்டியூரில், துக்க நிகழ்வுக்கு மஹிந்த்ரா காரில் நேற்று வந்து விட்டு, ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மாலை, 4:00 மணிக்கு பட்லுார் நால்

ரோட்டில், சாலையோரம் காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சத்தி வழி-யாக கோவைக்கு, பேப்பர் பாரம் ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் லாரி, கார் மீது மோதியது.

20 அடி துாரம் தள்ளிச்சென்று, பனை மரத்தில் காருடன் மோதி லாரி நின்றது. இதில் கார் அப்-பளம் போல நொறுங்கியது.

வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணையில், டாரஸ் லாரி டிரைவர் ஜெகதீசன், கண் அயர்ந்து விட்டதால், கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டது, முதற்கட்ட விசாரணை

யில் தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us