/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆற்றில் குளித்தபோது வலிப்பு நீரில் மூழ்கி பலியான டெய்லர்
/
ஆற்றில் குளித்தபோது வலிப்பு நீரில் மூழ்கி பலியான டெய்லர்
ஆற்றில் குளித்தபோது வலிப்பு நீரில் மூழ்கி பலியான டெய்லர்
ஆற்றில் குளித்தபோது வலிப்பு நீரில் மூழ்கி பலியான டெய்லர்
ADDED : செப் 30, 2025 01:30 AM
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றில் ஒரு ஆண் சடலம் நேற்று காலை மிதந்தது. சத்தியமங்கலம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் கோகுல், 32, என்பது தெரிய வந்தது.
பெற்றோர் இறந்த நிலையில் கவுந்தப்பாடியில் அக்கா வீட்டில் இருந்து கொண்டு, ஓராண்டுக்கும் மேலாக சத்தியமங்கலம் தனியார் கார்மெண்ட்சில், டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த, 10 நாட்களுக்கு முன் அக்காவுடன் சண்டை போட்டுவிட்டு கார்மெண்ட்சிலேயே தங்கி வேலை செய்துள்ளார். நேற்று முன்தினம் மாலை துணி துவைப்பதற்காக ஆற்றுக்கு சென்றவர் குளித்துள்ளார். அப்போது வலிப்பு ஏற்பட்டதில் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.