ADDED : ஜூலை 12, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, ;கோபி, சத்தி, தாளவாடி, பவானிசாகர், அந்தியூர், நம்பியூர், டி.என்.,பாளையம் என ஏழு யூனியன்களில், 545 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 760 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கவுன்சிலிங், கடந்த, 7ம் தேதி துவங்கி நேற்று வரை கரட்டடிபாளையம் பஞ்., யூனியன் துவக்கபள்ளியில் நடந்தது.
இதில், 58 இடைநிலை ஆசிரியர், பிற மாவட்டங்களில் இடமாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் கவுன்சிலிங் துவங்கியது முதல், விருப்பம் தெரிவித்த மாவட்டங்கள் விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் கவுன்சிலிங்கில், 80 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. இதனால், 58 ஆசிரியர்களும் பணிபுரியும் அதே பள்ளியிலேயே பணியை தொடர்வர் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

