ADDED : அக் 10, 2024 01:43 AM
ஆசிரியர்கள் சங்க கூட்டம்
ஈரோடு, அக். 10-
தமிழ்நாடு அரசு ஆசிரியர், மகளிர் நல அலுவலர்-மேற்பார்வையாளர் சங்கத்தின், ஈரோடு மண்டல மாவட்ட கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் விமலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாரதாமணி வரவேற்றார். சுப்பிரமணி, சீரங்கசாமி முன்னிலை வகித்தனர்.
சங்க மாநில தலைவர் சங்கர்பாபு, பழைய ஓய்வூதியம், அரசின் நிலைப்பாடு குறித்து பேசினார். ஷீலா பெர்னத் நன்றி கூறினார். ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த வாக்குறுதிபடி பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு, குடும்ப ஓய்வூதியம் காலதாமதமின்றி ஆணை வெளியிட வேண்டும். இரு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கம் சார்பில் சென்னையில் 2025 மார்ச் 7ல் சேப்பாக்கம் சமூக நலத்துறை ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மறியல் செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
