/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கறுப்பு பட்டையுடன் ஆசிரியர்கள் பணி
/
கறுப்பு பட்டையுடன் ஆசிரியர்கள் பணி
ADDED : அக் 16, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கோரிக்கைகளை நிறைவேற்றகோரி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், கறுப்பு பட்டை அணிந்து பணிகளில் ஈடுபட்டனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட அனைவருக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை, நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற கோரி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தங்களது உடைகளில் கறுப்பு பட்டை அணிந்து நேற்று பணிகளில் ஈடுபட்டனர். தாராபுரம் வட்டத்தில், மூலனுார், குண்டடம் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.