ADDED : ஏப் 27, 2026 04:01 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
அருகே சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன், 25; வாத்து மேய்க்கும்
தொழிலாளி. மனைவி, மகன் உள்ளனர். குமரேசன் நேற்று முன்தினம் மது
அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் மனைவியுடன் தகராறு
ஏற்பட்டுள்ளது. மகனுடன் மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து மனைவி வீட்டுக்கு வந்தபோது, குமரேசன்
வீட்டுக்குள் துாக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது
தெரிய வந்தது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்..
