ADDED : ஏப் 26, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை:பெருந்துறை, மேக்கூர், கள்ளியம்புதுாரை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ரகுமான், 26; பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை குறித்து, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவதுாறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் அளித்த புகாரின்படி, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுமானை கைது செய்தனர். பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில்
அடைத்தனர்.

