ADDED : ஏப் 30, 2026 05:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடும் வெயிலும், அனல் காற்றும் வீசியது.
காலை, 11:00 மணிக்கு மேல் வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. நேற்று அவ்வப்போது வானம் மேகமூட்டமாக காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை. ஆனாலும் வெப்பமான சூழல் தொடர்ந்தது. அதிகப்பட்சமாக, 103.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியது. 1.2 முதல், 5.2 டிகிரி வரை வெப்பம் கூடி குறைந்து உணரப்பட்டது.
